திமுகவின் வலிமையான வாக்கு வங்கியைப் பற்றியும் அதன் அரசியல் செல்வாக்கைப் பற்றியும் அவதூறாகப் பேசும் நோக்கில், தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தன் வரம்பு மீறி பேசி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. திமுகவின் அடித்தள பலத்தையும், மக்கள் மத்தியில் அக்கொண்டுள்ள செல்வாக்கையும் உணராமல் அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் முற்றிலும் திமிர்த்தனமானவை என்றும், அரசியல் நாகரிகமற்றவை என்றும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
முட்டாள்கள் என்ற வார்த்தையை வாய்க்கொழுப்பில் அமைச்சர் ஆதவ் பயன்படுத்தியிருப்பதாக திமுகவின் பரந்தாமன் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், SIR-ஆல் தவெக ஆட்சிக்கு வந்ததாக திருமா கூறினார். அப்படியென்றால், அவரைத்தான் முட்டாள் என்று ஆதவ் சொல்கிறாரா என கேள்வி எழுப்பினார். ஒருவேளை திருமாவை கூட்டணியில் இருந்து வெளியேற்றும் முயற்சியாக அவ்வாறு பேசினாரா என்றும் அவர் கேட்டுள்ளார்.
குறிப்பாக, திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் உள்ளிட்ட பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, திமுகவின் வாக்கு வங்கி என்பது யாராலும் அசைக்க முடியாத ஆலமரம் போன்றது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். மக்களின் ஆதரவுடன் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் திமுகவின் பலத்தை அவமதிக்கும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசி வருவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது என்றும், மக்கள் இதற்கு உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
