இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சந்திரிகா ரவி. 3 வயதிலிருந்தே நடனம் மற்றும் நடிப்பைக் கற்கத் தொடங்கினார். பின்னர் 16 வயதில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார்; உலகம் முழுவதும் நாடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2012 மிஸ் மாக்சிம் இந்தியாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மேலும் மிஸ் வேர்ல்ட் ஆஸ்திரேலியா 2012 இல் மாநில இறுதிப் போட்டியாளராக இடம்பிடித்த முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து செய், உன் காதல் இருந்தால் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஜிபி பிரகாஷின் பிளாக்மெயில் திரைப்படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பான் இந்தியா படமாக உருவாகி வரும் சில்க் ஸ்மிதா பயோபிக் படத்தில் இவர் சில்க் ஸ்மிதாவாக நடித்து வருகின்றார். நடிகைகள் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலே ஆடை அணிவதில் தாராளம் காட்டினாலே போதும் என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட பிளாக்மெயில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சேலை அணிந்து வந்த சந்திரிகா ரவி ரசிகர்களை மயக்கும் வகையில் வந்திருந்தார்.

மறைந்த கேவி ஆனந்தியின் உதவி இயக்குனரான மாறன் ஏற்கனவே இயக்குனராக இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ், தேஜு அஸ்வினி மற்றும் சந்திரிகா ரவியை வைத்து இயக்கியுள்ள பிளாக்மெயில் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. எந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கு சமீபத்தில் சந்திரிகா ரவி வந்திருந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
