யார் கெத்து?….. நடுரோட்டில் இரும்பு கம்பிகளுடன் மோதல்…. மாணவர்கள் செய்த அட்டகாசம்…. திருப்பூரில் பதைபதைக்க வைக்கும் பயங்கரம்….!

Spread the love

மாணவர் சமுதாயம் சீரழிவை நோக்கி நகர்கிறதா எனும் அச்சத்தையும் பேரதிர்ச்சியையும் சமீபத்திய சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன. திருப்பூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிலர் ‘யார் கெத்து’ என்ற போட்டியில் கம்பு மற்றும் இரும்பு கம்பிகளுடன் நடுரோட்டில் விரட்டி விரட்டி தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. குமரன் சிலை சந்திப்பில் நடந்த வன்முறையை பொதுமக்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், இது தொடர்பாக காவல்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தனிப்பட்ட சம்பவம் அல்ல; சென்னை பாரிமுனை, சென்ட்ரல் மற்றும் தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதைகளில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மாணவர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் ஓடும் ரயில்களிலும் பிளாட்பாரங்களிலும் பயணிகளை அச்சுறுத்தும் சம்பவங்களும் தொடர்கின்றன. அதேபோல, நெல்லை மற்றும் கோவை பேருந்து நிலையங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து நடுரோட்டில் சண்டையிட்டுக் கொள்ளும் காணொளிகள் வெளியாகி, பெற்றோரையும் சமூக ஆர்வலர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்திக் கூலி வேலை செய்து படிக்க வைக்கும் நிலையில், சில மாணவர்கள் சமுதாயத்திற்கு எதிரான வன்முறைகளிலும் போதைப்பொருட்கள் ಬಳக்கத்திலும் ஈடுபடுவது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. படிப்பில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்துக் கொண்டு நன்மதிப்பைப் பெறாமல், சட்டரீதியான சிக்கல்களைப் பற்றிப் கவலைப்படாமல் ஆயுதங்களுடன் மோதிக்கொள்வது அவர்களின் வாழ்கைப் பாதையையே திசை திருப்பி விடுகிறது.

“இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்” என்ற கூற்று நிஜமாக வேண்டுமானால், பள்ளிகளில் உடனடி மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வெறும் பாடப் புத்தகக் கல்வியோடு நிறுத்தாமல், நீதி போதனை வகுப்புகளையும் மனநல ஆலோசனைகளையும் கட்டாயமாக்க வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தி, வன்முறையற்ற, பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

3 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

4 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

4 மணத்தியாலங்கள் ago