விஷால் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவரது முழு பெயர் விஷால் கிருஷ்ணா ரெட்டி என்பதாகும். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபல தயாரிப்பாளர் ஆவார். விஷால் ஆக்சன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 2004 ஆம் ஆண்டு செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால். அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு சண்டக்கோழி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால். தொடர்ந்து திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால்.
நல்ல உயரமும் சிக்ஸ் பேக் பாடி கொண்டிருப்பதால் எந்த கதாபாத்திரம் ஆனாலும் அவருக்கு பொருந்தியது. மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர் விஷால். தொடர்ந்து துப்பறிவாளன் இரும்புத்திரை சண்டக்கோழி 2 அயோத்தியா மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் விஷால். தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க விஷால் இடம் பேச்சுவார்த்தை நடந்து இருக்கிறது. இந்த நிலையில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை விஷால் அவரே இயக்கி நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி 2 படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் விஷாலின் மற்றொரு வெற்றி படமும் இரண்டாம் பாகமாக வரவுள்ளது. விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சைபர் கிரைம் திரில்லர் திரைப்படமாக வெளியான இரும்புத்திரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் தற்போது சர்தார் 2 படத்தை இயக்கி வருவதால் அப்படம் முடிந்ததும் இரும்புத்திரை 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…