“வானத்தில் இருந்து வந்த எமன்… நடுரோட்டில் பெண்ணை தாக்கிய ராட்சத கூரை… ரத்த வெள்ளத்தில் துடித்த அவலம்… உறைந்து போக வைக்கும் பகீர் வீடியோ…!”

By Swetha on ஆடி 14, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த வசாய்-விரார் பகுதியில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி மாலை கடுமையான மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது. அப்போது தீபா அமித் தினோஜியா என்ற பெண்மணி மற்றொரு நபருடன் குடை பிடித்தபடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் அங்குள்ள ஒரு கடைக்கு அருகே கடந்து சென்றபோது, பலத்த காற்றின் வேகம் தாங்காமல் அக்கடையின் மேல் இருந்த இரும்புத் தகட்டினாலான கூரை திடீரென பெயர்ந்து அவர்கள் மீது பயங்கரமாக விழுந்தது.

இந்த எதிர்பாராத விபத்தில் அந்தப் பெண்ணின் தலையிலும் உடலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கூரைத் தகடு விழுந்த வேகத்தில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட ஆழமான காயங்களுக்காக சுமார் 22 தையல்கள் போடப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

   

இந்த பதைபதைக்க வைக்கும் விபத்தின் முழு காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. பருவமழை மற்றும் பலத்த காற்று வீசும் காலங்களில் பொதுமக்கள் சாலைகளில் நடமாடும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், கடைகளின் விளம்பரப் பலகைகள் மற்றும் கூரைகளை உரிமையாளர்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.