மக்கள் தங்களுடைய நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ரயில் பயணம் செய்வதற்கு டிக்கெட் முன்கூட்டியே பதிவு செய்வது வழக்கம். இதற்கு ஆன்லைன் மூலமாக புக் செய்யலாம். ஒருசில நேரங்களில் நம்முடைய கையில் பணம் இருக்காது. அந்த நேரத்தில் என்ன செய்வதன்று தெரியாமல் இருப்போம். இனி அதற்கு கவலையில்லை. இதோ சூப்பர் வசதி வந்துவிட்டது. அதாவது ஐஆர்சிடிசி பயணிகளுக்காக epaylater வசதியை கொண்டுவந்துள்ளது. இதன் கீழ் உடனடியாக பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் மற்றும் 14 நாட்களுக்குள் பணத்தை எளிதாக செலுத்தும் வசதியும் கிடைக்கும்.
அதாவது ஐஆர்சிடிசி யின் வலைத்தளம் மற்றும் செல்போன் செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு டிஜிட்டல் கட்டண விருப்பம் இந்த வசதியின் மூலமாக பயணிகள் ரயில், விமானம், டூர் பேக்கேஜ் டிக்கெட்டுகளை உடனடியாக முன் பதிவு செய்து 14 நாட்களுக்குள் எந்த வட்டியும் இல்லாமல் பணம் செலுத்தலாம். சாதாரண டிக்கட் ஆக இருந்தாலும் சரி, தட்கல் டிக்கெட் ஆக இருந்தாலும் சரி உடனடியாக epaylater மூலமாக முன்பதிவு செய்து பிறகு பணத்தை செலுத்தலாம். இதற்கு கட்டண பக்கத்திற்கு சென்று e-paylater விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்பதிவு உடனடியாக நிறைவடையும். பணம் செலுத்த 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அதாவது ஐஆர்சிடிசி டிஜிட்டல் இந்தியா மற்றும் பணம் இல்லா பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த வசதியை தொடங்கியுள்ளது.
