“அணுசக்தி தளம் எங்கே?” ஐநா சபையையே அதிரவைத்த ஈரானின் ரகசிய நகர்வு.. உலகப்போருக்கான எச்சரிக்கையா.? வெளியான பகீர் தகவல்கள்..!!

By Soundarya on பங்குனி 19, 2026

Spread the love

ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய யுரேனியம் செறிவூட்டல் தளம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ (IAEA) கடும் குழப்பத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்த மையம் கடுமையாகச் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த இடம் ஒரு செயலில் உள்ள அணுசக்தி மையமா அல்லது வெறும் காலி மண்டபமா (Empty Hall) என்பது குறித்து தெளிவான உளவுத் தகவல்கள் இல்லை என சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மீண்டும் ரகசியமாகத் தொடங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டி போரைத் தொடர்ந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவரோ, ஈரான் தனது அணுசக்தித் திறனை மீண்டும் கட்டியெழுப்பவில்லை என்று கூறி ட்ரம்ப்பின் கருத்திற்கு முரணான தகவலை வெளியிட்டுள்ளார். இந்த முரண்பட்ட தகவல்கள் ஈரானுக்கு எதிரான போர் நியாயமானதா என்ற கேள்வியை சர்வதேச அரங்கில் எழுப்பியுள்ளது.

   

ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்களைத் தாக்கி வருகிறது. குறிப்பாக கத்தாரின் எல்என்ஜி (LNG) ஆலை மீதான தாக்குதல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்துள்ளது. அணுசக்தி மையமா அல்லது காலி இடமா என்ற தெளிவற்ற நிலையில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள், அப்பகுதியில் தேவையற்ற உயிரிழப்புகளையும் பொருளாதாரப் பேரழிவையும் ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.