அமெரிக்கா vs ஈரான்… மீண்டும் வெடிக்கும் மோதல்… 3 மாஸ்டர் பிளான் ரெடி… அமெரிக்காவுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை…!!

By Gayathri on ஆவணி 22, 2026

Spread the love

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் கடுமையான தாக்குதலை முன்னெடுத்தன. இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி தனது குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், அமெரிக்கப் படைகளுக்குத் தளம் அமைக்க உதவிய சவுதி அரேபியா, பஹ்ரைன், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய வளைகுடா நாடுகள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தியது. மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியப் பாதையாக விளங்கும் ஹார்மூஸ் நீரிணையை ஈரான் அதிரடியாக மூடியதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்தப் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்மூஸ் நீரிணை வழியே சென்ற சில கப்பல்களை ஈரான் மீண்டும் தாக்கியதால், அந்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன. இந்தச் சூழலில், ஈரான் மற்றும் அதற்கு உதவும் அனைத்து நாடுகள் மீதும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள ஈரான், தங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் வான், கடல் மற்றும் தரைவழியாக அமெரிக்காவிற்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.