ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்கும் வகையில் புதிய போர் உத்திகளைக் கையாண்டு வருகிறது. உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்த முக்கிய பாதையை மூடியுள்ள ஈரான், கப்பல்கள் செல்வதைத் தடுப்பதற்காகத் தற்கொலைப்படை டிரோன் படகுகளை பெருமளவில் தயார் நிலையில் வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான “ஏவுகனை நகரம்” குறித்த காட்சிகளை அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட வீடியோவில், நீண்ட சுரங்கப்பாதைகளுக்குள் கடற்படை டிரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆளே இல்லாமல் இயக்கப்படும் இந்தத் தற்கொலைப்படை படகுகள் (USVs), வெடிபொருட்களைச் சுமந்து சென்று இலக்கின் மீது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பாரசீக வளைகுடாவில் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ள நிலையில், ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் மாத தொடக்கத்தில் ஓமன் கடற்கரை மற்றும் ஈராக் துறைமுகம் அருகே நடந்த எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், இந்தத் தற்கொலைப்படை டிரோன்களின் திறனை உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய தாக்குதல்களால் போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய அதே உத்தியை ஈரான் தற்போது கையாள்வது உலக நாடுகளிடையே கவலையை அதிகரித்துள்ளது.
ஈரானின் இந்தச் செயல்பாடுகள் போர்ச் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கொண்டு செல்வதைத் தடுப்போம் என ஈரான் வெளிப்படையாகவே அறிவித்திருப்பது, எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஈரான் வெளியிட்ட இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டன என்பது குறித்தோ அல்லது இந்த ஆயுதத் தளங்கள் ஏற்கனவே தாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…