“1 கி.மீ தூரத்திற்கு அப்பால் ஓடிவிடுங்கள்”அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் கொடுத்த இறுதி எச்சரிக்கை.. உலகநாடுகள் அதிர்ச்சி..!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

ஈரானில் நடைபெறும் படுகொலைகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இன்று முதல் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்போவதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

 தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ள அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அந்த நிறுவனங்களைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான், நாளை முதல் தனது தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.