கடந்த மூன்று வாரங்களாக இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் விமான தளங்கள், அணுவின் ஆராய்ச்சி நிலங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இதற்கு பதிலடியாக ஈரான் நேற்று இரவு கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளத்தை ஏவுகணையால் தாக்கியது.
இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்திருந்தார். மேலும் 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
