ஈரான் புதிய உச்ச தலைவரின் கதையை முடித்த அமெரிக்கா – இஸ்ரேல்… கோமாவில் மொஜ்தபா கமேனி? …. உலக நாடுகளை அதிரவைக்கும் ஷாக் நியூஸ்..!

By Nanthini on பங்குனி 13, 2026

Spread the love

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு அவரது மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில் படுகாயமடைந்து, கோமா நிலையில் இருப்பதாகப் பிரிட்டிஷ் நாளிதழான ‘தி சன்’ அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் மொஜ்தபா கமேனியின் கால்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்றும், அவரது வயிறு மற்றும் கல்லீரல் கடுமையாகச் சிதைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில், ஈரான் சுகாதார அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மிகுந்த பாதுகாப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

   

ஈரானின் தற்போதைய போர் வியூகங்களை மொஜ்தபா கமேனி வழிநடத்தவில்லை என்பது உலக அளவில் எரிபொருள் விநியோகத்தில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போர் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அவர் நேரில் தொலைக்காட்சியில் தோன்றி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது பெயரில் அறிக்கை மட்டுமே வாசிக்கப்பட்டது. இதனால் அவர் உண்மையிலேயே கோமா நிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

   

ஈரான் அரசு தரப்பில் மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரது உடல்நிலை குறித்த தெளிவான விளக்கங்கள் வராதது, ஈரானின் அரசியல் மற்றும் ராணுவச் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த இக்கட்டான சூழல் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை நீட்டிக்கச் செய்துள்ளது.