“எங்களுக்குப் பதிலடி கொடுக்க உரிமை உண்டு… யாரு தடுத்தாலும் கேட்க மாட்டோம்” இஸ்ரேல், அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

By Soundarya on பங்குனி 2, 2026

Spread the love

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி விடுத்துள்ள காட்டமான அறிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், தங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுப்பது ஈரானின் இறையாண்மை சார்ந்த உரிமை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். “ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கூறுவதற்கு எந்தவொரு நாட்டின் தலைவருக்கும் உரிமை இல்லை” என்று குறிப்பிட்ட அரக்சி, தற்காப்புக்கான தார்மீக உரிமை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை அவர் கடுமையாகச் சாடினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் தொடர்ந்து உறுதியுடன் போராடும் என்றும், எதிரிகளின் எந்தவொரு அத்துமீறலுக்கும் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். சர்வதேச நாடுகள் அமைதி காக்க வலியுறுத்தினாலும், தனது பாதுகாப்பு நலன்களில் ஈரான் சமரசம் செய்துகொள்ளாது என்பதையே அமைச்சரின் இந்த உரை உணர்த்துகிறது