“எங்ககிட்டயே வேலையைக் காட்டுறீங்களா?”… “ஷெபாஸ் ஷெரீப்புக்கு ‘பல்பு’ கொடுத்த ஈரான்… கராச்சி சென்ற கப்பலை நடுவழியிலேயே திருப்பிவிட்ட அதிரடி…!

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் சமீபத்தில் அறிவித்திருந்தது. பிராந்திய அமைதிக்காகத் தான் முன்வந்து உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்தியஸ்தம் பேச வந்த பாகிஸ்தானுக்கே அதிர்ச்சி அளிக்கும் வகையில், அந்நாட்டை நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்றை ஈரான் ராணுவம் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.

உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்மூஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தற்போது ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் விதித்துள்ளது. இந்நிலையில், கரீபியன் தீவு நாட்டின் கொடியுடன் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘செலென்’ (SELEN) என்ற சரக்குக் கப்பலை, ஹார்மூஸ் ஜலசந்தியைத் தாண்ட அனுமதிக்க முடியாது என ஈரான் கடற்படை அதிரடியாக உத்தரவிட்டது.

ஈரான் புரட்சிகர ராணுவத்தின் (IRGC) கடற்படை தளபதி ரியர் அட்மிரல் அலிரேசா தங்க்ஸிரி இது குறித்து விளக்கமளிக்கையில், முறையான பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் அந்தக் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். ஈரானின் கடல்சார் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமல் எந்தவொரு கப்பலும் இந்த முக்கிய வழித்தடத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார். இதனால் அந்தக் கப்பல் தற்போது பாரசீக வளைகுடா பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அரசியலில் தன்னை ஒரு முக்கிய சக்தியாகக் காட்டிக்கொள்ள முயன்ற பாகிஸ்தானுக்கு, ஈரானின் இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் ஒப்புதல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியிருந்த நிலையில், ஈரான் அதனைச் சற்றும் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானுக்குச் சென்ற கப்பலையே முடக்கியுள்ளது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்த பாகிஸ்தானின் கோரிக்கைக்கு ஈரானிடமிருந்து எந்தவொரு ஆக்கப்பூர்வமான வரவேற்பும் கிடைக்காதது சர்வதேச அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

24 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

35 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

47 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago