நொடிக்கு நொடி பதற்றம்…. சவுதி, UAE மீது ஏவுகணை மழை…. ஈரான் நடத்திய அதிரடி தாக்குதல்… நடுங்கும் வளைகுடா நாடுகள்….!

Spread the love

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று அதிகாலை, சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை நோக்கி வந்த டிரோன்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தினர். அதேபோல், குவைத்தின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவ முயன்ற டிரோன்களும் அந்நாட்டு தேசியப் படையினரால் அழிக்கப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. அந்நாட்டு குடியிருப்பாளர்களின் செல்போன்களுக்கு ஏவுகணை எச்சரிக்கைகள் அனுப்பப்பட்ட நிலையில், வான் பாதுகாப்புப் படைகள் ஈரானின் தாக்குதல்களை முறியடித்து வருகின்றன. தாங்கள் எந்தத் தாக்குதலிலும் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமீரகம், காரணமின்றி ஈரான் தங்களை வம்புக்கு இழுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் என்ற ஒரே காரணத்திற்காக ஈரான் இத்தகைய தாக்குதல்களை நடத்துவது தேவையற்றது என்று அந்நாடு கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்த போர்ச் சூழல் உலக சந்தையில் கடும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருவது, பங்குச் சந்தைகளிலும் கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், தங்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இந்த போர் பதற்றம் அப்பகுதியின் சுற்றுலாத் துறையை மிக மோசமாக பாதித்துள்ளது. துபாய், அபுதாபி போன்ற சுற்றுலா நகரங்களுக்கு இது பெரிய சவாலாக மாறியுள்ளது. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளால் சர்வதேச விமானங்கள் தங்கள் பாதைகளை மாற்றியமைப்பதும், பயணத் திட்டங்களை ரத்து செய்வதும் சுற்றுலா வருவாயை பெருமளவு குறைக்கும். பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, வர்த்தக ரீதியான வருகைகளும் (Business Tourism) பாதிக்கப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளின் பொருளாதாரமும் சரிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“ஸ்டாலினுக்கு ‘கதம் கதம்’.. 10 முறை தோற்ற சேலத்துக்காரர்”… “பாஜக காலில் விழும் திமுக!” – கருத்துக் கணிப்புகளை கிழித்துத் தொங்கவிட்ட தளபதி விஜய்!….!

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுக…

5 minutes ago

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

15 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

35 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

48 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

49 minutes ago