“என் அறைக்கு வந்து கதவைத் திறக்க சொன்னார்…” தற்கொலைக்கு முன் கடிதத்தில் குறிப்பிட்ட ஐபிஎஸ் அதிகாரி…. திருமணம் முடிந்த பிறகும் நீடித்ததாக அதிர்ச்சி வாக்குமூலம்…!!

By Devi Ramu on ஆடி 21, 2026

Spread the love

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான உதய கிருஷ்ணா ரெட்டி உயிரிழந்த சம்பவத்தில், அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், தனடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற சக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருடன் கடந்த ஒரு வருடமாக நெருங்கிய காதல் தொடர்பில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் பெண் அதிகாரிக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையிலும் தங்களது உறவு தொடர்ந்து நீடித்து வந்ததாகவும், அவர் தனது அறைக்கு நேரடியாக வந்து கதவைத் திறக்குமாறு வற்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் உதய கிருஷ்ணா ரெட்டி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தன்னிடம் உள்ள இந்தத் தொடர்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் கைவசம் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் குறித்து அந்தப் பெண் அதிகாரியின் கணவரிடமும் தான் விரிவாகத் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். உயர்பதவியில் இருக்கும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் எழுதியுள்ள இந்தத் தற்கொலை கடிதம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.