ஐபோன் 15 சீரிஸ்…. உலகிலேயே…. இந்தியாவில் உச்சத்தை தொட்ட விலை…. எவ்வளவு தெரியுமா…?

By admin on புரட்டாதி 16, 2023

Spread the love

உலகிலேயே இந்தியாவில் தான் புதிய ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை மிகவும் அதிகம். அமெரிக்காவில் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் போன்களை “வொண்டர்லஸ்ட்” நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்த நிலையில், இந்த மாடல்கள் செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் யு.எஸ், இந்தியா, ஹாங்காங் போன்ற சந்தைகளில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் விலை நிர்ணயத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உயர்நிலை புரோ மாடல்களுக்கு அவற்றின் முன்னோடிகளை விட தற்போது அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐபோன் ப்ரோ 15 சீரிஸ் 5 ஆயிரம் ரூபாயும், ப்ரோ மேக்ஸ் 20 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து இருக்கிறது.

   

   

ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அமெரிக்காவில் 20 சதவீதத்திற்கும் மேல் மலிவானவை என்றாலும் வங்கி தள்ளுபடிகள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகள் போன்றவை விலையை மேலும் குறைக்கிறது.

 

இந்தியாவில் ஐபோன் 15 மாடல் 79 ஆயிரம் ரூபாய், ஐபோன் 15 ப்ரோ 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய், ஐபோன் 15 பிளஸ் 89 ஆயிரத்து 900 ரூபாய், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தான் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் விலை மிகவும் அதிகம். இதனால் துபாய் அல்லது வியட்நாமுக்கு சென்று மேற்கூறிய மாடல் மொபைல்களை வாங்கலாம். ஐபோன் 15 சீரிஸ் போன்கள் குறைவான விலைக்கு வாங்குவதற்கு உரிய இடம் என்றால் அது அமெரிக்கா தான். அங்கு சென்றால் குறைவான விலைக்கு ஐபோனை வாங்கலாம்.