“தயவுசெஞ்சு தங்கம் வாங்காதீங்க!”… இன்ஸ்டாகிராமில் மோடி வெளியிட்ட வீடியோ… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், அத்தியாவசியத் தேவையின்றி தங்கத்தில் முதலீடு செய்வதையும், வெளிநாடுகளில் திருமணம் மற்றும் சுற்றுலாப் பயணங்கள் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தியப் பொருளாதாரம் தற்போது 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், இந்த முன்னேற்றத்தை மேலும் ஸ்திரப்படுத்த உள்நாட்டுப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துமாறு தனது சமீபத்திய சமூக வலைத்தளப் பதிவிலும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமரின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இன்றைய பங்குச்சந்தையில் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களின் பங்குகள் கணிசமான சரிவைச் சந்தித்துள்ளன. முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.8 சதவீதமும், டைட்டன் நிறுவனப் பங்குகள் 1.3 சதவீதமும், தங்கமயில் ஜூவல்லரி பங்குகள் 1.7 சதவீதமும் வீழ்ச்சியடைந்து வர்த்தகமாகின.