முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் ரூ.3021 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்த்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலமாக 6250 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரயில் கதவுகள், பிரேக்குகள் தயாரிக்கும் நார்-பிரீம்ஸ் நிறுவனம் 2000 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காற்றாலைக்கு டர்பைன் தயாரிக்கும் நார் டெக்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளது. இதன்மூலம் 2700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.திறன்மிகு மின்மோட்டார்கள் தயாரிக்கும் இபிஎம் பாஸ்ட் நிறுவனம் 21 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்கிறது. இதனால் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.
