“இதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல அண்ணா”…. விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. ஆரம்பத்திலேயே வெடித்த உள்கட்சி மோதல்… தவெக-வில் உச்சக்கட்ட பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி வந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர்பதவிகளை தமிழக வெற்றி பெற்றக் கழகத் தலைமை வழங்கி வருவது, தொடக்கக் காலத்திலிருந்தே விஜய் மக்கள் இயக்கத்தில் உழைத்த மூத்த நிர்வாகிகளிடையேயும் தொண்டர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் உட்கட்சிப் பூசலும் கோஷ்டி மோதல்களும் வெளிப்படையாக வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இதன் எதிரொலியாகவே, அண்மையில் சிவகாசி உள்ளிட்ட சில தொகுதி அலுவலகங்களில் சுதந்திர தினத்தின் போது தேசியக் கொடி ஏற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தலைமை தங்களைத் புறக்கணித்துவிட்டுப் புதிதாக இணைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்துத் தீவிரமாக உழைத்த நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பி வரும் வேளையில், இந்த உள்கட்சிப் பூசல் கட்சியின் தொடக்கக் கட்ட வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.