திமுகவில் உட்கட்சித் தேர்தலை நடத்தி, புதிய மாவட்டச் செயலாளர்களைத் தேர்வு செய்ய அக்கட்சியின் ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக திமுகவின் அமைப்பு ரீதியிலான 110 மாவட்டங்களுக்கும் ஓரிரு நாட்களில் தலைமைக் கழகப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த உட்கட்சி மறுசீரமைப்பில் பட்டியலினத்தவர்கள் மற்றும் பெண்களுக்கு எந்தெந்த மாவட்டங்களை ஒதுக்குவது என்பது குறித்த இறுதி முடிவை திமுக தலைமை விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும், கட்சிப் பணிகளை விரைவுபடுத்தவும் நிர்வாகத்தை எளிமையாக்கவும் பகுதிச் செயலாளர்களுக்கான எல்லைகளும் விரைவில் மறுவரையறை செய்யப்பட உள்ளதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
