‘Grok AI’ மூலம் சித்தரிக்கப்படும் பெண்களின் அந்தரங்க போட்டோ… வெளியானது அதிரடி உத்தரவு..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
ஏஐ (AI) தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதைத் தவறாகப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, எலான் மஸ்க்கின் ‘Grok AI’ மூலம் பெண்களின் உருவங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு  இணையத்தில் பரப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில், பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் அத்தகைய படங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று ‘X’  நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ‘Grok AI’ தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும், தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறி இத்தகைய சர்ச்சைக்குரிய படங்களை உருவாக்கும் பயனர்களின் கணக்குகளைத் தாமதமின்றி முடக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், தனிநபர் உரிமைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு இந்த உத்தரவின் மூலம் எச்சரித்துள்ளது.