தமிழ் சினிமாவில் பீல் குட் படங்கள் வெளியாவது என்பது அரிதுதான். அடிக்கடி ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் மாறி வருகிறது. இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களில் பீல் குட் படங்கள் என்ற பட்டியலிட்டால் அது குடும்பஸ்தன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது தான் சரத்குமார் மற்றும் தேவயானி நடித்துள்ள 3BHK திரைப்படம். இந்த படத்தில் அப்பா அம்மா கதாபாத்திரங்களில் சரத்குமார் மற்றும் தேவயானி நடிக்கிறார்கள் என்றதும் சூரியவம்சம் ஜோடி மறுபடியும் நினைவுக்கு வந்தது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் மிகப்பெரிய கனவாக இருக்கக்கூடிய சொந்த வீடு வாங்குதல் என்ற கனவை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாடு இந்த திரைப்படம் ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கி இருந்த நிலையில் அருண் விஷ்வா என்பவர் தயாரித்திருந்தார்.
இதில் சரத்குமார் மற்றும் தேவயானி உடன் இணைந்து சித்தார்த், மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சரத்குமார் வாசுதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் வாசுதேவன் மனைவி சாந்தியாக தேவயானி நடித்துள்ளார். மீதா ரகுநாத் ஆர்த்தி ரோலில் வாசுதேவன் மகளாகவும் பிரபு என்ற ரோலில் வாசுதேவன் மகனாக சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அதாவது இந்த படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் சித்தார்த்தின் அம்மாவாக நடித்துள்ள தேவயானியின் வயது 51. கடந்த 1974 ஆம் ஆண்டு பிறந்த தேவயானிக்கு தற்போது 51 வயதாகிறது. அதுவே தேவயானியின் மகனாக பிரபு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த் கடந்த 1979 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவருக்கு 46 வயதாகிறது. தன்னுடன் ஐந்து வயது இளைய நடிகருக்கு தான் தேவயானி அம்மாவாக நடித்துள்ளார். இந்தச் செய்தி தான் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…