விஜய்க்கு செக் வைத்த தனுஷ்?…. அறிவாலயத்தையும் கோட்டையையும் அலறவிடும் அந்த ரகசிய மூவ்…. 234 தொகுதிகளிலும் ரகசிய கட்-அண்ட்-ரைட் ஆர்டர்…!

Spread the love

தமிழக அரசியல் களம் எப்போதும் சினிமா நட்சத்திரங்களின் வருகையாலும், எதிர்பாராத திருப்பங்களாலும் பரபரப்பாகவே இருந்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஆளுங்கட்சியையும் அரசியல் வட்டாரங்களையும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். கடந்த ஒரு வருடமாகப் பின்னணியில் அமைதியாகத் தனது காய்களை நகர்த்தி வந்த அவர், சமீபத்தில் தனது பிறந்தநாளில் வெளியிட்ட புதிய கொடி மற்றும் மேடையில் பேசிய பூடகமான வார்த்தைகள் மூலம் தனது அரசியல் பயணத்தின் முதற்புள்ளியை வைத்துள்ளார்.

வெறும் பெயரளவில் இல்லாமல், மிகக் துல்லியமாகத் திட்டமிட்டே தனுஷ் களமிறங்கியுள்ளார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, இந்த ஆண்டுக்குள்ளேயே உறுப்பினர் சேர்க்கையை முடிக்க நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கொங்கு மண்டலத்தின் மையமான கோவையின் 10 தொகுதிகளிலும் இப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இளைஞர்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்கை வைத்து, தொகுதி வாரியாகத் தனது நிஜமான ‘வாக்கு வங்கி’ எவ்வளவு என்பதைத் துல்லியமாகக் கணக்கிடவே இந்த ரகசிய வியூகத்தைக் கையிலெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் வெற்றிக்கு மக்கள் தொண்டே பிரதான வழி என்பதை உணர்ந்து, தவெக அமைத்த அதே பாதையைத் தனுஷும் பின்பற்றி வருகிறார். கல்வி உதவித்தொகை, குருதிதான முகாம்கள், இலவச மருத்துவச் சேவைகள் மற்றும் அன்னதானம் என அடித்தட்டு மக்களைச் சென்றடையும் நற்பணிகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். மக்கள் மனதில் இடம்பிடித்து, அதை வாக்கு அரசியலாக மாற்றும் இந்த நகர்வுகள், தற்போதைய ஆளுங்கட்சியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கிடையே, பிரபல ஜோதிடர்களின் கணிப்புகளும், “விஜய் Vs தனுஷ்” என்ற எதிர்கால அரசியல் போட்டி குறித்த விவாதங்களும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.

தனுஷின் இந்தச் சத்தமில்லாத நகர்வுகள் வருங்காலத்தில் பெரிய அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உளவுத்துறையும் அவரது செயல்பாடுகளை உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது. தனுஷ் மற்றும் அவரது மன்ற நிர்வாகிகளின் அன்றாட நடவடிக்கைகள், மாவட்டக் கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளச் செயல்பாடுகளைக் கண்காணிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியல் அரியணையை நோக்கித் தனுஷ் தொடுத்துள்ள இந்த ‘சைலண்ட் அட்டாக்’, வரப்போகும் நாட்களில் தமிழக அரசியல் சதுரங்கத்தில் எந்த மாதிரியான புயலைக் கிளப்பப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

2 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

2 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

3 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

3 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

3 மணத்தியாலங்கள் ago