இயக்குனர் வேலையை கையிலெடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. GOAT படத்துக்காக ஆல் இன் ஆல் அழகு ராணியாக மாறிய தயாரிப்பாளர்..

By Ranjith Kumar on மாசி 28, 2024

Spread the love

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இசை நாயகன் யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையில் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி அவர்களின் தயாரிப்பில் படம் உருவாகிக் வருகிறது, இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ். பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

கோட்பாட்டில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், ஒன்று அப்பாவாகவும் இன்றென்றும் மகனாகவும் நடித்து வருகிறார். அப்பா கேரக்டர் ஒரு பார்வைக்கு வில்லன் போல் தோற்றமும், பையன் ஹீரோ போல் தோற்றமும் கொண்ட கேரக்டர்களும் நடிக்க உள்ளார்கள். பையன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தான் மீனாட்சி சவுத்ரி, அப்பாவின் கேரக்டருக்கு துணையாக சினேகா அவர்கள் ஹீரோயினாக நடிக்கிறார்கள். இப்ப படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

   

இந்த மாதம் 31ஆம் தேதி இப்படத்தில் வரும் பாடல் காண படப்பிடிப்பை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் கிளைமாக்ஸ் சீனை இலங்கையில் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்கள், ஆனால் தற்போது சில காரணங்களால் ரஷ்யாவிலும் அதர்பைஜானிலும் படப்பிடிப்பு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது, ஏற்கனவே அதர்பைஜானில் விடாமுயற்சி படமான அஜித் படம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, அதனால் சற்று தாமதமாகவும் என்று தெரிகிறது, ஆனால் ரஷ்யாவில் எடுத்து முடித்தபின் அதர் பஜானில் படம் எடுக்க உள்ளதாக தெரிகிறது,

   

இதற்கான லொகேஷன் பார்ப்பதற்கு வழக்கமாக டைரக்டரும் துணை இயக்குனரும் தான் செல்வார்கள், ஆனால் இந்த முறை இப்படத்தை தயாரிக்கும் நிறுவனமான ஏஜிஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் முதல்வர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ரஷ்யாவில் சென்று இதற்கான படப்பிடிப்பு தளத்தை பார்த்துவிட்டு இன்று சென்னை திரும்பி உள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் பிசியாக இருப்பதால் இந்த வேலையை தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்று தெரிகிறது, இந்த படத்திற்காக இக்குழு முழு முயற்சியும் போட்டு தயாரிப்பதை பார்த்தால் படம் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.