பிரபல நடிகரான பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 AD படத்தில் நடித்தார். இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். அடுத்ததாக சீதாராமம் படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஒரு பீரியாடிக் ட்ராமா கதை களத்தில் உருவாக உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்நிலையில் பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டாகிராம் பிரபலம் இமான்வி நடிக்கிறார். இமான்வி இந்த படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகிறார். இவர் லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்தவர்.

கடந்த 1995-ஆம் ஆண்டு இமான்வி டெல்லியில் பிறந்துள்ளார். இவரது குடும்பம் பாகிஸ்தானின் கராச்சியை சேர்ந்தது என கூறப்படுகிறது. சிறுவயதிலேயே இமான்வி குடும்பத்தினர் கலிபோர்னியாவுக்கு சென்று விட்டனர். பாகிஸ்தானியாவில் குடியேறிய ஒருவரை அனுபவத்தை விவரிக்கும் ஒரு குறும்படத்தில் இமான்வி நடித்துள்ளார். இமான்வி ஒரு நடன கலைஞர் ஆவார். யூடியூபில் இவருக்கு 1.8 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தால் படத்தின் ராமதா ஜோகி பாடலுக்கு நடனம் ஆடினார். அது வைரலானது. பின்னர் 2023 ஆம் ஆண்டு தூம் தூம் பாடலுக்கு இமானு நடனமாடிய வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இயக்குனர் ஒரு புது முகத்தை தேடும் போது இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் பிரபலமான இமான்வியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

