கரூர்ல 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம்… அவங்கள விட்டுட்டு என் மேல கேஸ்… ஸ்டாண்ட்-அப் காமெடி பெயரில் வம்பில் சிக்கிய யூடியூபர்… உசைனுக்கு எதிராகத் திரண்ட வழக்கறிஞர்கள்…!

By Visaka on ஆடி 9, 2026

Spread the love

கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து அவதூறாகவும் இழிவாகவும் பேசியதாக ‘PUN DANK’ யூடியூப் சேனலைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் பயாஸ் உசைன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஜூன் 7-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “41 பேரைக் கொன்றவர்கள் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்; ஆனால் என் மீது வழக்கு போடுகிறார்கள்” என்று பயாஸ் உசைன் பேசியதாகவும், இந்த அரிய விபத்தை நகைச்சுவை என்ற பெயரில் கேலி செய்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஆதித்யன் என்பவர் அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இத்தகைய பேச்சுகள், சமூக வலைதளங்களில் தேவையற்ற சர்ச்சைகளையும் பதற்றத்தையும் உருவாக்குவதாக வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சட்டப்பூர்வ விசாரணையில் இருக்கும் சூழலில், அதனை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய பயாஸ் உசைன் மீது காவல்துறையினர் உடனடியாகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வழக்கறிஞர் ஆதித்யன் வலியுறுத்தியுள்ளார்.