BIG BREAKING:சி.வி. சண்முகம் vs எடப்பாடி பழனிசாமி… உச்சக்கட்ட க்ளைமாக்ஸ்… கூண்டோடு ராஜினாமா செய்யும் ஆதரவாளர்கள்… அதிரும் அதிமுக கோட்டை… பதறிப்போன EPS..!

Spread the love

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் நீண்ட நாட்களாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டதில் இருந்தே இரு தரப்பிற்கும் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார். சி.வி. சண்முகத்தின் தீவிர ஆதரவாளர்களான மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், இணைச்செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 11 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த நீக்க அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் திண்டிவனத்தில் ஒன்று கூடி, “எங்களை நீக்கியதற்கு நன்றி” எனப் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கித் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அதிரடி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் மேலும் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தங்களது பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது விலகல் கடிதத்தை ஒப்படைக்க, 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒரே நேரத்தில் சென்னைய நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கட்சித் தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அரசியல் நகர்வுகள் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Visaka

Recent Posts

“என்னை யாரும் அழைக்கல.. நானும் போகல”…. தவெக மீது நாஞ்சில் சம்பத் கடும் அதிருப்தி… அரசியல் களத்தை அதிரவைத்த ஒற்றை பதிவு….!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து விலகி, தளபதி விஜய்யை நேரில் சந்தித்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர் நாஞ்சில்…

2 minutes ago

அதிர்ச்சி சம்பவம்..! நடுரோட்டில் டாக்டர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… சிக்கிய பள்ளி மாணவன்… காவல் நிலையத்தில் அம்பலமான பகீர் உண்மைகள்…!!

தருமபுரியில் மருத்துவக் கல்லூரி மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்த 17 வயது பள்ளி மாணவனை காவல்துறையினர் கைது…

6 minutes ago

“மாமா இறந்துட்டாரு”…. மனைவியின் கண்ணீர் நாடகம்…. படுக்கையில் கிடந்த கணவன்… சீக்ரெட் போன் உடைத்த பகீர் உண்மை….. திறந்து பார்த்த உறவினர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!

ஆரம்பத்தில் இயற்கை மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், மறைக்கப்பட்டிருந்த செல்போன் கிடைத்ததைத் தொடர்ந்து திட்டமிட்ட கொலையாக உருவெடுத்துள்ள சம்பவம்…

12 minutes ago

“தூய்மையாக்கப் போகிறேன்!”… புனிதச் சடங்கா? வக்கிர வெறியா?… ஈவுஇரக்கமற்ற செயல்… மனைவிக்கு கூட்டு வன்கொடுமை… ‘புனிதம்’ என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

குஜராத் மாநிலத்தில் அரங்கேறியுள்ள நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு கொடூர சம்பவத்தில், கணவனே தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும், கடுமையான…

12 minutes ago

“மது வேணும்னு கேட்டது குத்தமா?”…. அக்கா கொடுத்த அந்த ஒரு ஐடியா…. மனைவியை கொன்றுவிட்டு போதையில் பக்கத்திலேயே தூங்கிய கணவன்…. பெருங்குடியில் நடந்த கொடூரம்….!

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அம்பேத்கர் புரட்சி நகரைச் சேர்ந்த 35 வயதுடைய லோகநாதன் என்பவர், ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ‘செப்டோ’வில்…

18 minutes ago

யூசர்களே அலெர்ட்..! இனி கவலையே வேண்டாம்… வந்துடுச்சு புது ட்ரிக்… இனி உங்க ரகசிய சாட் 100% சேஃப்… வாட்ஸ்அப்பின் அதிரடி அப்டேட்…!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் 'ரெஸ்ட்ரிக்டட் சாட்' என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.…

23 minutes ago