“அடிக்கடி வரும் பயங்கர கனவுகள்…” நள்ளிரவில் நிர்வாணமாக…! கையில் அம்மன் சிலையுடன் ஓடி உயிரை விட்ட பெண் இன்ஜினியர்… தாய் கூறிய பரபரப்பு தகவல்கள்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற பெண் என்ஜினீயர், பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நிலவிய கடுமையான பணிச்சுமை காரணமாகச் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின்னர் ஐதராபாத் நகரி பகுதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், பணி இழப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாகச் சமீபகாலமாக மனநல மருத்துவச் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில், தனது பெற்ற தாயை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு வெளியேறிய தேஜஸ்வினி, திடீரென தனது உடைகளைக் களைந்துவிட்டு நிர்வாண நிலையில் கையில் ஒரு புடவையுடன் தெருக்களில் ஓடியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த பீரம்மா ஆலயத்திற்குள் புகுந்து, கருவறையில் இருந்த அம்மன் சிலையைக் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடி, அருகே இருந்த திருக்குளத்தில் குதித்துத் தனது உயிரை மாய்த்துக் கொண்ட துயரச் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில்\பதிவாகியுள்ளது.

மறுநாள் காலையில் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து தேடியபோது, மகளின் உடல் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், அந்தப் பெண் எடுத்துச் சென்ற அம்மன் சிலை இன்னும் கண்டறியப்படாததால், இந்த வழக்கின் மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் அந்தச் சிலையைக் குளத்திற்குள் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தனது மகளுக்கு உறக்கத்தில் அடிக்கடி பயங்கரமான கனவுகள் தோன்றி அவதிப்பட்டு வந்ததாக அவரது தாய் போலீசாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“விளையாட ஓடக்கூடாது…” 82 மாணவர்களுக்கு பாதி மொட்டை அடித்து விசித்திரத் தண்டனை….!விடிய விடிய சித்திரவதை செய்து…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டம் சாம்புல்காட்டில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியில் , 'ஒழுக்கம்' மற்றும்…

3 minutes ago

“வரதட்சணை கொடுமைக்கு மேலும் ஒரு பலியா?”… 22 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்… போலீசில் சிக்கிய அடில்… தாயின் கண்ணீர் வாக்குமூலம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரின் பிரம்மபுரி பகுதியில், முஸ்கான் என்ற 22 வயது இளம்பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக…

5 minutes ago

திக்.. திக்..! 16-வது மாடி பார்ட்டியில் நடந்தது என்ன?… நள்ளிரவில் வந்த போன் கால்… ஜிம் மாஸ்டருக்கு நேர்ந்த கொடூரம்… பதறவைக்கும் பின்னணி…!!

சககார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடைபெற்ற உடற்பயிற்சி நிலையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்ற 25 வயதான நந்தன்…

12 minutes ago

“கல்லூரி வாசலில் மோதிய மாணவர்கள்…” பறந்து வந்த வாள், கத்திகள்…. கோஷ்டி மோதலால் அலறி ஓடிய மக்கள்… பகீர் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா சாலையில் அமைந்துள்ள குஜ்ராரா இன்டர் கல்லூரி வாசலில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட…

18 minutes ago

“உன்ன கொன்னுடுவேன்”… கஞ்சா போதையில் உச்சகட்ட அட்டகாசம்… நடுரோட்டில் பெண்களைத் தாக்கிய வாலிபர்கள்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!!

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓங்கப்பாடி தாங்கல் கிராமத்தில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.…

18 minutes ago