சற்றுமுன் அதிரடி…! கவர்னர் ஆகிறார் எச்.ராஜா..? இன்ப அதிர்ச்சியில் தமிழக பாஜக…!!

By Soundarya on ஆவணி 18, 2025

Spread the love

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பாஜகவின் கழுகு பார்வை தமிழகத்தை நோக்கியே இருக்கிறது.  இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலானது வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

இந்நிலையில் எச்.ராஜா கவர்னராக நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு பிறகு, மகாராஷ்டிரா (சிபி ராதாகிருஷ்ணனுக்கு பதில்) அல்லது நாகலாந்து (இல.கணேசனுக்கு பதில்) கவர்னராக எச்.ராஜா நியக்கப்படலாம் என கூறப்படுகிறது.