உப்பை ஆரோக்கியத்தின் எதிரியாகப் பார்க்கும் பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, அது நரம்பு மண்டலம் மற்றும் தசைச் செயல்பாடுகளுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுப்பொருள் என்று இதயநோய் நிபுணர் டாக்டர் டிமிட்ரி யாரனோவ் விளக்குகிறார். உடல்நலக் குறைபாடு இல்லாதவர்கள் உப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
ஏனெனில் சோடியம் உடலின் திரவ சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான இளைஞர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்குத் தேவையான அளவிலான உப்பு கிடைக்காவிட்டால், அது மயக்கம் போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்பதால் தேவையற்ற அச்சத்தைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.
இருப்பினும், இதயச் செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்த முடியாத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உப்பு ஆபத்தான காரணியாக மாறுகிறது. இவர்களுக்கு உடலில் நீர் கோர்ப்பது மற்றும் மூச்சுத்திணறல் போன்ற தீவிர சிக்கல்களை இது உண்டாக்கக்கூடும் என்பதால், மருத்துவ ஆலோசனையின்படி உப்பைக் குறைத்துக் கொள்வது வாழ்நாள் நீட்டிப்பிற்கு அவசியமாகும்.
வயது முதிர்ந்தவர்களும், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களும் சோடியம் உட்கொள்ளலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில், உப்பு அனைவருக்கும் எதிரியல்ல, ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்தே அதன் பயன்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.
