அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16ஆம் தேதி இரவு டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் பலரும் இருந்தார்கள். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பானது நடைபெற்றது. இந்த சந்திப்பு முடிந்து எடப்பாடி திரும்பும் பொழுது சொகுசு காரில் கைகுட்டையால் முகத்தை மூடி இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல அவர் பக்கத்தில் இருந்த முக்கிய புள்ளி யார்? என்ற கேள்வியும் எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. அதாவது எடப்பா.டி பழனிச்சாமி அருகே இருந்த முக்கிய புள்ளி அபினேஷ்வர். பாஷ்யம் கட்டுமான நிறுவனத் தலைவர் கடலுரைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் எம்.பி சம்பத்தின் நெருங்கிய உறவினர்.
அதிமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றுக்கு பாஷ்யம் ரயில் நிலையம் என்று பெயர் வைத்தபோது கடும் எதிர்ப்பு எழும்பிய நிலையில் அது மீண்டும் மாற்றப்பட்டது. தற்போது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, எடப்பாடி மகன் ஆகியோருக்கு நண்பராக இருக்கும் அபினேஷ் பெரும்பாலும் அமித்ஷாவின் வீட்டில் தான் இருப்பாராம். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த போதும் இவர்தான் அருகில் இருந்தாராம். எடப்பாடி பழனிச்சாமி தமிழில் பேசியதை ஹிந்தியில் மொழிபெயர்த்து அமித்ஷாவிடம் சொன்னவரும் இவர். ஏற்கனவே அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தபோது அபினேஷ் தான் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…