மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் பயம் என்ற உணர்வு நிச்சயம் இருக்கும். எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் பயப்படுவது உண்டு. ஆபத்துகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் விழிப்புடன் வைத்திருக்கவும் பய உணர்வு இன்றி அமையாது. அப்படி பயம் இல்லாவிட்டால் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியுமா? உண்மையில் இது ஒரு நோயாக கருதப்படுகிறது. அந்த நோயின் பெயர் மற்றும் அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.
குஷிங்ஸ் எனப்படும் மன அழுத்தம் நோய் குறியால் ஏற்படும் பதட்டத்தை குறைக்க அட்ரினல் சுரப்பிகளை அகற்றிய பிரிட்டிஷ் மனிதரான ஜோர்டின் என்ற நபருக்கு பயம் என்ற உணர்வே இல்லாமல் போனது. உடலில் நோய் வந்தால் மன அழுத்த ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.
இதற்கு சிகிச்சையாக மருத்துவர்கள் அந்த நபரின் அட்ரினல் சுரப்பிககளை அகற்றினர். அதன் பிறகு அவருக்கு பயம் என்ற உணர்வு இல்லாமல் போனது கடந்த 2012 ஆம் ஆண்டு ஜோர்டின் ஒரு ரோலர் கொஸ்டின் சவாரி செய்து, விமானத்திலிருந்து குதித்து, ஒரு கயிறை பயன்படுத்தி மிகப்பெரிய உயரத்தில் இருந்து கீழே இறங்கிய போதும் பயத்தை உணரவில்லை. அவரது இதயத்துடிப்பு சாதாரண வேகத்தில் இருந்துள்ளது.
இந்த நோயின் பெயர் உர்பாக் வைத்தே என அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதான ஒரு மரபணு நிலை. இதுவரை 400 பேருக்கு மட்டுமே இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தை உணர மாட்டார்கள். ஏனென்றால் மூளையின் ஒரு பகுதியான அமிக்டாலா எனப்படும் பகுதி சரியாக இயங்காததால் அவர்களால் பய உணர்வை அனுபவிக்க முடியாது.
