ராமராஜனை கல்யாணம் செஞ்சப்போ, எங்க வீட்லயே என்னை கொல்ல பார்த்தாங்க.. சினிமாவை மிஞ்சிய நடிகை நளினியின் மறுபக்கம்..

By Sumathi

Updated on:

நடிகை நளினி, 1980களில் தமிழ் சினிமாவில் இவரை போல எந்த நடிகையும் பிஸியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பல முன்னணி ஹீரோக்களுக்கு நளினிதான் கதாநாயகி. அவரது சர்வலட்சணமாக முகமும், அழகிய தோற்றமும், உயரமும், நவரசத்தை வெளிப்படுத்தும் முகபாவமும் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பாக அமைந்தது. உதவி இயக்குநராக இந்த ராமராஜனை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவந்தேன் என்று சென்டிமென்டாக குங்குமத்தை நெற்றியில் வைத்துவிட்டு,. காதல் கடிதங்கள் கொடுத்து நளினியை காதலித்து மணந்தவர் நடிகர் ராமராஜன். ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

Nalini RamarajanRem

   

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நளினி கூறியதாவது, நான் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், நான் நடித்த 24 படங்களுக்கு உதவி இயக்குநராக ராமராஜன் பணிபுரிந்தார். அப்போது ஹீரோயின் அணிந்துள்ள புடவை, நெற்றியில் உள்ள பொட்டு உள்ளிட்ட விஷயங்களை உதவி இயக்குநர்தான் குறிப்பெடுத்து எழுதி வைக்க வேண்டும். அப்படி என்னை பார்த்து, பார்த்தே அவருக்கு என் மீது காதல் வந்துவிட்டது. காதல் கடிதங்களாக கொடுத்துக்கொண்டிருந்த அவரை, வீட்டுக்கு பெண் பார்க்க வரச் சொன்னேன்.

Nalini RamarajanRem

அவர் எஸ்எஸ் சந்திரன், சினிமா தயாரிப்பாளர் ராம நாராயணன் போன்றவர்களை அழைத்து வந்ததால், என் அம்மா சத்தமிட்டார். என் மகளுக்கு திருமணமே செய்து வைக்க மாட்டேன் என்றார். அப்போதுதான், இப்படியே நடிகையாகவே இருந்துவிட வேண்டுமா, எனக்கு திருமணமே செய்துவைக்க மாட்டார்களோ என தோன்றியது.

தமிழ் படங்களில் நடிக்க விடாமல், அடுத்த ஒரு வருடம் மலையாள படங்களில் மட்டுமே நடித்தேன். அதன்பிறகுதான், இருவரும் வீட்டுக்கு தெரியாமல் சென்று திருமணம் செய்துக்கொண்டோம். சென்னைக்குள் ஒரு மாதமாக நாங்கள் இருவருமே வராமல் ஒளிந்துக்கொண்டோம்.

Nalini RamarajanRem

தெரிந்தால், எங்க வீட்லயே என்னை கொல்ல பார்ப்பார்கள் என தெரிந்தது. இதையறிந்துக்கொண்ட புரட்சி தலைவர் எம்ஜிஆர் எங்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து சாப்பிட வைத்தார். பயந்து பயந்து வாழக்கூடாது என தைரியம் கொடுத்தார். உட்லண்ட் ஓட்டலில் அவரே பணம் கட்டி, எங்கள் கல்யாண ரிஷப்சனை நடத்தி வைத்தார். அந்த ரிசப்ஷனில் வந்து அவரே கலந்துக்கொண்டு எங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டுச் சென்றார் என, கூறியிருக்கிறார் நடிகை நளினி ராமராஜன்.

author avatar
Sumathi