உங்களுக்கு தெரியுமா..? மூளை எப்போது தூங்குகிறது என்று..? இதோ பலரும் அறியாத சுவாரஸ்ய உண்மைகள்..!!

By Soundarya on ஐப்பசி 8, 2025

Spread the love

பொதுவாக உடல் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க வேண்டும் என்றால் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் உடலில் அனைத்து பாகங்களையும் கட்டுப்படுத்தும் மூளை நம்முடைய தலைப்பகுதியில் காணப்படுகிறது. உடல் உறுப்புகளை இயக்கும் மூளைக்கு ஓய்வு இருக்கிறதா  என்பது குறித்து யோசித்து உள்ளீர்களா? மூளையின் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு தூக்கம் அவசியம். தூக்கத்தில் போதும் மூளை ஓய்வெடுக்குமா என்று கேட்டால் பாதி உண்மை இருக்கிறது. உண்மையில் நாம் தூங்கினால் நம்முடைய மூளையையும் அதனுடைய செயல்பாட்டை முழுமையாக நிறுத்திக் கொள்வது கிடையாது.

மூளையின் செயல்பாடு மற்ற பாகங்களை விட சற்று குறைவாக இருக்கும் தவிர முழுமையாக ஓய்வில் இருக்காது. தூக்கத்திலும் நினைவாற்றல் மற்றும் உடல் குணமடைதல் போன்ற முக்கிய செயல்களை செய்கிறது. சுவாசம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய தொழில்களையே செய்கிறது. நாம் தூங்கும்போது மூளை நிறுத்தினால் உயிர் பிழைக்க முடியாது. நாம்  தூக்கத்தில் இருக்கும்போது திடீரென்று கேட்கும் சத்தம், நச்சுவாசனைகள் ஆபத்துகளின் போது விரைவாக செயல்பட மூளையில் சில பகுதியில் எப்போதும் தயார் நிலையில் தான் இருக்கும். எனவே நாம் தூங்கினாலும் மூளையானது தகவல்களை ஒழுங்குபடுத்துதல், தன்னைத்தானே சுத்தம் செய்தல் போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருகிறது.