“7 சீட் கொடுத்தா ராஜினாமா பண்ணுவோம்” திமுகவின் கணக்கால் அதிர்ச்சியில் பிரேமலதா… தேமுதிகவில் வெடித்தது உட்கட்சிப் போர்..!!

By Soundarya on பங்குனி 21, 2026

Spread the love

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒற்றை இலக்கத்தில் (7 அல்லது 8) தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என திமுக தரப்பில் பேசப்படுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே சுதீஷுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்ட நிலையில், இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்துள்ளது.

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து, தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக கூட்டணியில் 10 தொகுதிகளுக்கும் குறைவாகப் பெற்றால், தாங்கள் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சியின் கௌரவத்தைக் காக்க அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

   

மாவட்டச் செயலாளர்களின் இந்தத் திடீர் எதிர்ப்பால் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், தற்போது அவர் அவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேமுதிகவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி சலசலப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.