சின்னத்திரையில் தன் பயணத்தை ஆரம்பித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். ரோபோ சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் அதிகமாக கஷ்டப்பட்டு இருந்தாலும் தன்னுடைய திறமையின் மூலமாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் தன்னுடைய கலக்கலான மிமிக்கிரி காமெடியால் ரசிகர்களை கவர்ந்து பல முன்னணி நடிகர்களோடு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ச்சியாக திரைப்படங்களில் கதாநாயகன்களுக்கு இணையாக ரோபோ சங்கர் நடித்துக் கொண்டிருந்தார்.

Robo shankar weight loss
அப்படியான நிலையில் தான் அவருக்கு மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில் சூட்டிங்கில் இருந்த ரோபோ சங்கர் தன்னுடைய உடல் நிலையை பெரிய அளவில் கவனத்தை செலுத்தாமல் இருக்க மஞ்சள் காமாலை பெரிய அளவில் அவருடைய உடலை பாதிக்க தொடங்கிவிட்டது. அதற்கு பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரோபோ சங்கர் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்பட்டார். அந்த நேரத்தில் ரோபோ சுந்தரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக அதை பார்த்து ரசிகர்கள் இவருக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி உடல் மெலிந்து போனார் என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

Robo shankar weight loss
அதே நேரத்தில் ஒரு சிலர் ரோபோ சங்கர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தான் அவருடைய உடல்நிலை இப்படி ஆகிவிட்டது என்று பேசி வந்தனர். அதற்கு பிறகு படிப்படியாக ரோபோ சங்கர் தன்னுடைய பழைய நிலைக்கு மாறி இருந்தார். இப்படியான நிலையில் இப்போது அவருடைய மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணமும் நடத்தி வைக்க உள்ளார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.

Indraja shankar emotional about robo shankar
அவர் கூறியிருப்பதாவது, எட்டு மாசத்துக்கு முன்னாடி எங்க வீடு இப்ப இருக்குற மாதிரி சந்தோசமா இல்ல. எப்போதும் எங்கள் வீட்டில் ஒரு குழப்பமும் கண்ணீரும்தான் இருந்தது. எங்க அப்பாவின் நிலைமையை பார்த்து நானும் மனசுக்குள் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்த நேரத்தில் பலர் எங்களை கஷ்டப்படுத்திட்டாங்க. தேவையில்லாததை எல்லாம் தப்பு தப்பா பேசினாங்க. ஆனால் இன்றைக்கு எல்லாவற்றையும் கடந்து நாங்கள் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம். அதுபோல ஒரு கஷ்டம் வந்துட்டா அதையே நெனச்சு முடங்கிட்டோம்னா அந்த கஷ்டம் நம்மை ஜெயிச்சு விடும். ஆனால் அடுத்து என்ன செய்யணும் என்று அதை நோக்கியே நம்முடைய பயணத்தை இருக்க வேண்டுமே தவிர நம்மை விமர்சிப்பவர்களை பற்றி நாம் கண்டு கொள்ளக்கூடாது.

Robo shankar family
அப்படித்தான் நாங்கள் அந்த கஷ்ட காலத்தில் இருந்து மீண்டு வந்தோம் என்று இந்திரஜா பேசியிருக்கிறார். இவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யாரும் எதுவும் தெரியாமல் ஒருவர் குறித்து தவறாக பேசக்கூடாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். ரோபோ சங்கர் ரசிகர்களோ உங்கள் அப்பா எப்போதும் நலமாக இருப்பார், மணப்பெண் கண்கலங்க கூடாதும்மா என பதிவிட்டு வருகிறார்கள்.