#image_title
கோபால்சாமி துரைசாமி நாயுடு என்கிற ஜி.டி.நாயுடு. இவர் கோயம்புத்தூர் மாவட்டம் , கலங்கல் கிராமத்தில் பிறந்தார். தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராக இருந்த இவர் 4-ம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டு தனக்குத் தனே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலேயர் ஒருவரின் மோட்டாரைப் பெற்று அதை அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து அதில் உள்ள இயந்திர பாகங்களைப் பற்றி அறிந்து கொண்டு பின் தானும் அதே போல் ஒரு மோட்டார் கம்பெனியை உருவாக்க நினைத்தார்.
இந்த ஆர்வம் காரணமாக இளம் வயதில் ஜி.டி. நாயுடு ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத் தொழில் நுட்பத்தை கருத்தூன்றிப் படித்து அறிந்து கொண்டார். சிறிது காலத்திலேயே திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலை நிறுவினார். அப்போது முதலாம் உலகப்போர் துவங்கிய காலமாக இருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்து, அவருடைய அபரிமிதமான வர்த்தக திறமை குறுகிய காலத்திலேயே திருப்பூரில் இலட்சாதிபதிகளில் ஒருவரானார்.
மேலும் மும்பை சென்று பருத்தி வியாபாரத்தைத் தொடர்ந்தார். பின் மும்பை பருத்தி தரகர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கையிருப்பு முழுவதும் இழந்து நஷ்டத்துடன் ஊர் திரும்பினார். மீண்டும் மனம் தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்குச் சேர்ந்தார். முதன் முதலில் பொள்ளாச்சிக்கும், பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு.
ராமகிருஷ்ண பரமஹம்சரை சோதித்துப் பார்த்த சுவாமி விவேகானந்தர்.. துறவியாக என்ட்ரி கொடுத்த அற்புத தருணம்
தன்னோடு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு ‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினார் நாயுடு. அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுநர்களுக்கு தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு.
#image_title
முதன் முதலாக அவருடைய நிறுவனத்தை சேர்ந்த பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து , பேருந்து நிலையங்களில் வைத்து சாதனை படைத்தார். பயணச்சீட்டு வழங்குபவர்க்கு ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்.
மேலும் மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்ததன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை. எஞ்சின் ஓடிக்கொண்டு இருக்கும் போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டு பிடிக்க (அதிர்வு சோதிப்பான்) Vibrator tester என்ற இயந்திரத்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்தார்.
#image_title
புகைப்படத் துறையில், பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்து கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன. அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் சாதனை புரிந்தார்.
அஜீத்துடன் மோதிய ‘அழகி‘.. தட்டுத் தடுமாறி ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த சுவாரஸ்யம்..
சோளச் செடிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி 26 கிளைகளோடு 181/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார். இந்த அதிசய செடியில் 39 கதிர்கள் வரை இருந்தன. விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம், பருத்தி செடி, துவரை செடி என அவருடைய ஆராய்ச்சி ஏராளம். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக ஜெர்மானியர்கள் அவருடைய பருத்தி செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்று பெயர் சூட்டி கவுரவித்தனர்.
#image_title
1938 ம் ஆண்டு 18 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்திற்கு இலவசமாக ஒப்படைத்தார். தன்னுடைய சுய முயற்சியால் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். அக் கல்லூரி தற்போது ‘அரசினர் தொழில் நுட்ப கல்லூரி’ (G C T ) என அறியப்படுகிறது.
மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டு இந்திய அறிவியல் மேதைகளில் ஒருவராகத் திகழ்கிறார் இந்தியாவின் எடிசனான ஜி.டி.நாயுடு.
#image_title
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…