சிறுநீர் கழித்ததை தட்டி கேட்ட இந்திய இளைஞர்…. கொடூரமாக சுட்டுக்கொலை…. அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!

By Srimathi on புரட்டாதி 9, 2025

Spread the love

கலிபோர்னியாவில், தான் வேலை பார்த்த கடைக்கு வெளியே சிறுநீர் கழித்த நபரை தட்டி கேட்ட, இந்தியாவை சேர்ந்த கபில் (26) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிலின் குடும்பத்தினர் இவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மற்றும் ஹரியானா மாநில அரசின் உதவியை நாடி வருகின்றனர். மேலும் இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோ எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு நுழைந்துள்ளார். இதனால் இவரது குடும்பம் கிட்டத்தட்ட ரூ. 45 லட்சம் செலவு செய்துள்ளது. அமெரிக்காவிற்கு நுழைந்தவுடன் கபில் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட பின், அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.