கனடாவின் டொராண்டோ நகரில் 26 வயதான நவ்நீத் கவுர் என்ற இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பேசிவிட்டுத் திடீரெனத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புக் குழுவினர் முதலுதவி அளித்தும், தீவிரக் காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சரண்ஜித் சிங் என்பவரை ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி கைது செய்தனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ள புலனாய்வாளர்கள், முதற்கட்டக் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கான சரியான பின்னணி காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், சாட்சிகள் தகவல்களைப் பகிருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…