ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்திய சுற்றுலாப் பயணியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவில், “அந்த நபர் பைக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடியில் ஒரு தலிபான் நபர் அவரை நிறுத்தும்போது, அவர் ஒரு “இந்தியர்” என்று சொன்னவுடன் அவரது நடத்தை மாறிவிடுகிறது. முன்னதாக அவர் சோதனைச் சாவடியில் பாஸ்போர்ட் ஆவணங்களைச் சரிபார்ப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
An Indian tourist in Afghanistan was stopped by the Taliban at a checkpoint for a routine passport check. But the moment he said he was from India, they smiled, welcomed him, & let him go without even checking his documents. This is how Afghanistan treats its true friends. 🇦🇫❤️🇮🇳 pic.twitter.com/YsKFVVEVP5
— Fazal Afghan (@fhzadran) October 7, 2025
ஆனால் “இந்தியர்” என்று கேட்டதும், அவர் அவரை அன்புடன் வரவேற்கிறார். சோதனைச் சாவடியில் நின்று, அந்த நபர் தாலிபானிடம் தான் காபூலுக்குப் போவதாகக் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்த நபர், “நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?” என்று கேட்கிறார், “நான் இந்தியாவைச் சேர்ந்தவன்” என்று அந்த நபர் பதிலளிக்கிறார். இதைக் கேட்டதும், தாலிபானி உடனடியாக எந்த ஆவணங்களையும் சரிபார்க்காமல் அவரை கடந்து செல்ல அனுமதிக்கிறார். ஆனால் புறப்படுவதற்கு முன், தாலிபன் நபர் இந்திய பைக்கர்க்கு தேநீர் வழங்குகிறார். . இந்த வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
