ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்…. இந்திய முதலீட்டாளர்களுக்கு மரண அடி…. ஒரே நாளில் பங்குச்சந்தையில் நடந்த அந்தப் பெரும் துயரம்….!

Spread the love

மத்திய கிழக்குப் பகுதியில் வெடித்துள்ள போர் பதற்றம் இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த புவிசார் அரசியல் நெருக்கடியால், முதலீட்டாளர்கள் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ.31 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இந்த மோதல் காரணமாக இன்று திங்கட்கிழமை ஒரே நாளில் இந்தியப் பங்குச்சந்தைகள் சுமார் ரூ.12.78 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை இழந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1352 புள்ளிகள் சரிந்து 77,566 புள்ளிகளாகவும், நிஃப்டி 422 புள்ளிகள் குறைந்து 24,028 புள்ளிகளாகவும் முடிந்துள்ளன. கடந்த ஓராண்டில் இந்தியப் பங்குச்சந்தைகள் சந்தித்துள்ள மிக மோசமான சரிவாக இது கருதப்படுகிறது.

இந்தப் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பீப்பாய்க்கு 114 டாலரைக் கடந்து உயர்ந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், விலை உயர்வு பணவீக்கம் மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்து, இந்தியப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வெளியேறி வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். வங்கித் துறை மற்றும் இதர முக்கிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. மத்திய கிழக்கு மோதல் நீடிக்கும் பட்சத்தில், அது இந்திய பங்குச்சந்தைகளில் இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

1 மணத்தியாலம் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

2 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

2 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

2 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

2 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

2 மணத்தியாலங்கள் ago