குளியலறைக்குள் கிடந்த பிணம்… 4 மாதங்களிலேயே புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… போட்டோ எடுத்து காதலிக்கு அனுப்பிய கணவன்… அமெரிக்கப் போலீசாரை ஏமாற்றிய இந்தியர்…!

By Visaka on ஆடி 9, 2026

Spread the love

அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நர்னே (30), தனது மனைவி ராஜிதா சப்பினேனியை (27) கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, கடந்த ஒன்பது மாதங்களாக நடத்திய நாடகம் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2025 அக்டோபர் 27 அன்று, தனது மனைவி குளியலறையை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு கதவைத் திறக்கவில்லை என்று பெல்வ்யூ காவல்துறைக்கு அவினாஷ் பதற்றத்துடன் அவசர அழைப்பு விடுத்துள்ளார். கதவை உடைத்துப் பார்த்தபோது ராஜிதா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தான் வெளியே சென்றிருந்த 40 நிமிடங்களில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக அவினாஷ் துயரக் கணவனாகக் காட்டிய வாக்குமூலம், ஆரம்பத்தில் காவல்துறையினரை நம்ப வைத்தாலும், வீட்டில் வேறு யாரும் நுழைந்ததற்கான ஆதாரம் இல்லாததால் அவர் மீது சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

இந்த வழக்கின் முக்கிய திருப்புமுனையாக, ராஜிதாவின் மரணம் தற்கொலை அல்ல, அது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கொலை என்று மருத்துவப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. தொடர் விசாரணையில், அவினாஷுக்கு இந்தியாவில் ஒரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக ரகசிய உறவு இருந்ததும், 2025 ஜூன் மாதம் நடந்த இவர்களது திருமணத்தில் அந்த காதலியும் பங்கேற்றதும் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை நடந்த நாளன்று, குளியலறை கதவை உடைக்க முயல்வதாக நாடகமாடியபடியே அவினாஷ் தனது காதலியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். மேலும், மனைவியின் சடலத்தைப் புகைப்படம் எடுத்து அவருக்கு அனுப்பிய அதிர்ச்சித் தகவலும், இறப்பதற்கு முன் ராஜிதா தனக்குக் கொடுக்கப்பட்ட பானங்கள் கசப்பாகவும் மருந்து வாடையுடனும் இருந்ததாக அனுப்பிய குறுஞ்செய்திகளும் குற்றத்தை நிரூபிக்கும் முக்கிய ஆதாரங்களாகச் சிக்கின.

   

ஒன்பது மாத கால தீவிர விசாரணை மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த ஜூலை 5-ம் தேதி அவினாஷ் மீது முதல்-நிலை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு பெல்வ்யூ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 5 மில்லியன் டாலர் பிணையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இந்தியப் பொறியாளரின் கொடூரச் செயல், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.