போடு ரகிட ரகிட…. ஸ்லீப்பர் கிளாஸ் ரயில் பயணிகளுக்கு புதிய வசதி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

நாடு முழுவதும் தினம் தோறும் ஏராளமான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகளின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஸ்லீப்பர் கிளாஸ் பணிகளுக்கும் இனி பெட்ஷீட் மற்றும் தலையணை வழங்கும் புதிய சேவையை வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி தலையணைக்கு 30 ரூபாயும், பெட்ஷீட் பெறுவதற்கு 20 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .