ஒரே App-ல எல்லாம் முடிஞ்சிரும்…!! ரயில் டிக்கெட் எடுத்தா தள்ளுபடி மேல தள்ளுபடி…! இந்திய ரயில்வே சொன்ன குட் நியூஸ்…!!

Spread the love

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்காக ‘ரயில் ஒன்’  எனும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலி மூலம் முன்பதிவு இல்லாத சாதாரண டிக்கெட்டுகளை எடுக்கும்போது 3 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜனவரி 14) முதல் அமலுக்கு வரும் இந்த அதிரடி சலுகை வரும் ஜூலை 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

குறிப்பாக, ரயில்வே வாலட் மூலம் பணம் செலுத்துவோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள 3 சதவீத கேஷ்பேக் சலுகையுடன் சேர்த்து, இந்த 3 சதவீத கூடுதல் தள்ளுபடியும் கிடைப்பதால் பயணிகள் இரட்டிப்புப் பலன் அடையலாம். ஒரே செயலியில் முன்பதிவு டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் என அனைத்தையும் பெறும் வகையில் இந்த ரயில் ஒன் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் டிக்கெட் எடுப்பது மட்டுமின்றி ரயிலின் இருப்பிடம், பெட்டிகளின் வரிசை, பிஎன்ஆர் நிலை போன்ற தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். மேலும், உணவு ஆர்டர் செய்தல் மற்றும் டாக்ஸி முன்பதிவு போன்ற கூடுதல் வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை ஆன்லைன் செயலியில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ரயில் நிலைய கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் எடுப்பவர்களுக்குப் பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago