இந்திய ரியல் ஹீரோ..! 174 பயணிகள் பாதுகாப்பு… நடுவானில் அரங்கேறிய உண்மை த்ரில்லர் சம்பவம்… வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் மோடி…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில் நடைபெறவிருந்த பெரும் நாசவேலை இந்திய விமானியின் அசாதாரணத் துணிச்சலால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை இயக்கிய இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் மீது, அவருடன் பணியாற்றிய துணை விமானி கத்தியால் திடீர் தாக்குதல் நடத்தினார். விமானத்தை வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கும் கொடிய நோக்கில் அந்த நபர் செயல்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த போதிலும் கேப்டன் ஸ்மித் தன் உயிரைப் பணயம் வைத்து தீரத்துடன் போராடினார்.

கடும் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும், தனது சமயோஜித புத்தியால் விமானிகள் அறையின் கதவை ஸ்மித் திறந்தார். உடனடியாக உள்ளே நுழைந்த பயணிகளும், அங்கு பயணம் செய்த மாற்று விமானப் பணியாளர்களும் இணைந்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் சவுதி அரேபியாவில் உள்ள தபுக் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. கேப்டன் ஸ்மித்தின் இந்த வீரச் செயலால் விமானத்திலிருந்த சுமார் 174 பயணிகளின் உயிர்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டன.

   

இந்த மாபெரும் வீரதீரச் செயலுக்காக கேப்டன் ஸ்மித்துக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்மித்தின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு பேசியதுடன், “மற்றொரு 9/11 போன்ற பேரழிவைத் தடுத்து நிறுத்திய ஸ்மித் ஒரு உண்மையான ஹீரோ” என்று பெருமிதத்துடன் புகழ்ந்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் அவரது துணிச்சலை வியந்து பாராட்டியுள்ளனர். பலத்த காயமடைந்துள்ள கேப்டன் ஸ்மித் தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.