மும்பை ஐஐடி-யில் (IIT) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார். அப்போது, “விண்வெளி வீரராக விரும்பினால் உங்கள் ஞானப்பற்களை (Wisdom teeth) இழக்கத் தயாராக வேண்டும்; விண்வெளிப் பயணத் தேர்வின் போது பற்கள் பிடுங்கப்படுகின்றன” என்று கூறினார். விண்வெளியில் எந்தவொரு மருத்துவ அவசர நிலையையும் கையாள விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கே செய்ய முடியாத ஒரு விஷயம் பல் அறுவை சிகிச்சை. எனவே, விண்கலம் ஏவப்படுவதற்கு முன்பு வீரர்களுக்குப் பற்களில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதற்காக, “என்னுடைய இரண்டு ஞானப்பற்கள் அகற்றப்பட்டன. என்னுடன் பயிற்சி பெற்ற பிரசாந்த் நாயர் மூன்று பற்களையும், அங்கத் பிரதாப் நான்கு பற்களையும் அகற்றியுள்ளார்கள். விண்வெளி வீரராக வேண்டும் என்று நினைத்தால் உங்கள் ஞானப்பல்லை விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று கலகலப்பாகக் கூறியுள்ளார்.
