ஹப்பாடா இப்போவாது ஒரு முடிவுக்கு வந்தீங்களே.. ஒரு வழியாக இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

By Priya Ram

Published on:

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியாவின் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட நாட்களாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டனர்.

   

முதல் பாகம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றதால் இரண்டாவது பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்தியன் 2 பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி பல கட்டமாக நடைபெற இருப்பதால் தேர்தல் முடிந்ததும், வருகிற மே 24-ஆம் தேதி இந்தியன் 2 படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

மேலும் சித்தார்த், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், மனோபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

zx
author avatar
Priya Ram