பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். முதல் முதலில் ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன்z சிவாஜி, எந்திரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.
![]()
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம் குறித்து பிரபல வலைப்பேச்சு யூடியூப் சேனல் அந்தணன் கூறும்போது, இப்போதுள்ள இளைஞர்கள் இந்தியன் 2 படத்தின் கதை இதுதான் என முடிவு செய்து ஏற்கனவே படத்தை cringe லிஸ்டில் சேர்த்து விட்டார்கள்.

இதனால் படத்தை எடிட் செய்து மீண்டும் வெளியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. படத்தை நேரடியாக தூக்கி எறிய முடியாது. 2k கிட்ஸ்க்கு படம் பிடிக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை. டிக்கெட்டை ஆன்லைனில் கூடுதல் கட்டணத்திற்கு புக் செய்து ஹையாக வீட்டில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஒவ்வொரு காசும் முக்கியம் என்று சொல்லி ஒரு படம் எடுத்தால் அவன் cringe, பூமர் என்றுதான் கூறுவான்.

ஃபேமிலி ஆடியன்சால் மட்டுமே இப்போது இந்தியன் 2 படத்தை வெற்றி பெற செய்ய முடியும். அவர்கள் நினைத்தால் தான் இந்தியன் படத்தின் வசூல் வேண்டும் அதிகரிக்கும். குடும்பங்கள் கொண்டாடும் படமாக அதனை மாற்றி இரண்டரை மணி நேரமாக ஆக்க வேண்டும். அதற்கு உடன்பட்டு சங்கர் மாற்றங்களை கொண்டு வந்தால் இந்தியன் 2 படம் வெற்றி பெறும். அப்படி இல்லை என்றால் கேள்விக்குறியாக மாறிவிடும் என அந்தணன் கூறியுள்ளார்.

