சென்னை மக்களே ரெடியா..? மெரினா BEACH-ல MATCH பார்க்கலாம்… இந்தியா – நியூசிலாந்து மோதும் இறுதிப்போட்டி மெகா ஸ்கிரீனில் நேரலை..!!

By Soundarya on பங்குனி 7, 2026

Spread the love

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன. இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் நேரலை செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மாலை 5 மணி முதல் 7 மணி வரை பொதுமக்களை உற்சாகப்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாட்டுப்புறப் பாடல்கள், பெரிய மேளம், மல்வர் கம்பம் மற்றும் நடனம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடற்கரையில் திறந்தவெளியில் பிரம்மாண்ட திரையில் இந்தப் போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு சென்னை மக்களுக்குக் கிடைத்துள்ளது.

   

விளையாட்டுடன் கலை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு, ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெரினாவில் கூட உள்ள கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.